பயப்படாதீங்க மக்களே... படகு வாங்கியாச்சு - சென்னை மக்களின் மைன்ட் வாய்ஸ் என்ன?

Update: 2024-10-03 12:16 GMT

பயப்படாதீங்க மக்களே... படகு வாங்கியாச்சு - சென்னை மக்களின் மைன்ட் வாய்ஸ் என்ன?

#chennai #heavyrain #chennaicorporation #weatherupdate #boat #thanthitv

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால், கோவை, நீலகிரி, ராணிப்பேட்டை, திருவண்ணாலை, திருச்சி, நாகை, உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 8-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 9-ம் தேதி தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்