தீபாவளி லீவை ஜாலியாக கொண்டாடிய சென்னை சிறுவர்களுக்கு நேர்ந்த பெரும் சோகம்...துடித்து நின்ற மூச்சு

Update: 2024-11-03 03:52 GMT

தீபாவளி லீவை ஜாலியாக கொண்டாடிய சென்னை சிறுவர்களுக்கு நேர்ந்த பெரும் சோகம்... யார் கண்ணிலும் படாமல் துடித்து நின்ற மூச்சு

தீபாவளி கொண்டாட்டங்களுக்கு மத்தியில், சென்னை அருகே 2 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது..

சோழிங்கநல்லூர் அடுத்த தாழம்பூர் பகுதியில் தான், இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.. தீபாவளியை ஒட்டி 4 நாட்கள் பள்ளிகளுக்கு அடுத்தடுத்து விடுமுறை விடப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் தான், இங்கு உள்ள வால்வெட்டி தாங்கள் குளத்தில் வாணியம்பாடி நாவலூர் பகுதியை சார்ந்த 4 சிறுவர்கள் குளிக்க வந்திருக்கிறார்கள்..

அப்போது, குளத்தின் படியில் இறங்கி நான்கு சிறுவர்களும் குளித்தபோதுதான், இந்த துயரம் நேர்ந்துள்ளது. நீச்சல் தெரியாத 2 சிறுவர்கள் பரிதாபமாக குளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றனர்..

உயிரிழந்த சிறுவர்களில் ஒருவர், நாவலூர் பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய "ஜெஸ்வந்த்" என்பதும் மற்றொருவர், வாணியஞ்சாவடி பகுதியை சேர்ந்த 12 வயதுடைய "ஸ்ரீ சுதன்" என்பதும் தெரியவந்துள்ளது.. இரண்டு பேரும் தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.

நான்கு சிறுவர்களும் குளிக்கச் சென்றபோது, இருவரும் படியிலிருந்து நிலைத்தடுமாறி குளத்திற்குள் விழுந்ததால், நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளித்து நீண்ட நேரப்போராட்டத்திற்கு பிறகு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மனதை ரணமாக்கி உள்ளது..

இதைக் கண்டு அந்த குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த செம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 2 பேர் உடனடியாக விரைந்து போய், நீரில் மூழ்கிய சிறுவர்களைக் காப்பாற்றியும் பயனில்லாமல் போனது.. குளத்திற்குள் துடிதுடித்த 2 சிறுவர்களின் உயிர்களும் ஏற்கனவே, பிரிந்து இருக்கிறது..

இதனை அறிந்து அங்கு வந்த சிறுவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதறிப்போய் அழுதது அனைவரிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது..

இது தொடர்பாக, வழக்குபதிவு செய்த செம்மஞ்சேரி காவல் நிலைய போலீசார் பள்ளி மாணவர்களின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர்.. மேலும், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்