தமிழகத்தை சுற்றிவளைத்த விஜிலென்ஸ் - அதிகாரிகளுக்கு விபரீத தீபாவளி பரிசு.. தரமான சம்பவம்
தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 37 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு, 33 லட்சம் ரூபாயை கைப்பற்றினர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்துவது வழக்கம்.
அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் 37 அரசு அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர். சென்னை விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகம், தாம்பரம் சார் பதிவாளர் அலுவலகம், சேலையூர் சார் பதிவாளர் அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில், 33 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.