சாலையில் தவித்த மாற்றுத்திறனாளிப் பெண் - மனநலம் பாதிக்கப்பட்டவரின் மனிதநேய செயல்
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் மாற்றுத்திறனாளிப் பெண் சாலையை க
டக்க மனநல பாதிக்கப்பட்ட நபர் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புரசைவாக்கம் டவுட்டன் ரவுண்டானாவில், போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாத நிலையில் சக்கர நாற்காலியில் வந்த மாற்றுத்திறனாளி பெண், சாலையைக் கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், போக்குவரத்தை சீர் செய்து, பாதுகாப்பாக அந்த பெண் சாலையை கடக்க உதவி செய்தார். தொடர்ச்சியாக அவர் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த போக்குவரத்து காவலரை, எங்கு சென்றீர்கள் என அந்த நபர் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார்.