நேரடி நியமனம் தொடர்பான ஒன்றிய கல்வித்துறை செயலரின் சுற்றறிக்கை என்ஐடி சட்டத்திற்கு எதிரானதாக உள்ளதாக கூறி அதனை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறாமல் நேரடி நியமனம் செய்வது என்பது ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் பணப்பலன்களை பாதிக்கும் என கூறப் பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நேரடி நியமனம் தொடர்பான ஒன்றிய கல்வித்துறை செயலரின் சுற்றறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார். நேரடி நியமனம் என்ஐடி சட்டத்திற்கு எதிரானதாக உள்ளதால் அந்த சுற்றறிக்கையை ரத்து செய்வதாக கூறி உத்தரவிட்டார்.