வயிற்றிலேயே வைத்து சிசுவை முடிக்க திட்டம் தீட்டிய குடும்பம்திடீரென இறங்கி நடுங்க விட்ட அதிகாரி
இரவோடு இரவாக வயிற்றிலேயே வைத்து
சிசுவை முடிக்க திட்டம் தீட்டிய குடும்பம்
திடீரென இறங்கி நடுங்க விட்ட அதிகாரி
தர்மபுரியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த பெண்ணை மாவட்ட அதிகாரி கையும் களவுமாக பிடித்தது மட்டுமின்றி சராமரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்ப்போம்..
தர்மபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன.
இப்பைட், பாப்பாரப்பட்டி அருகே கிட்டன அள்ளியில் குழந்தையின் பாலினத்தை அறிந்து கருக்கலைப்பு செய்யப்படுவதாக மாவட்ட சுகாதார இணை இயக்குநர் சாந்திக்கு தகவல் வர, இரவு சுமார் 10 மணிக்கு போலீசாருடன் அங்கு விரைந்துள்ளார்.
கர்ப்பிணியின் வீட்டிற்கு சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு பெண் செல்வதை பார்த்த சாந்தி, சில நிமிடங்கள் காத்திருந்து, திடிரென உள்ளே சென்று பார்த்த போது அந்த பெண் கருக்கலைப்பு செய்ய முயன்றது தெரியவந்தது.
விசாரித்ததில் கர்ப்பிணிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது வயிற்றில் உள்ள குழந்தையும் பெண் குழந்தை என்பதால் கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளார்.
இதனை கேட்டு ஆத்திரமடைந்த அதிகாரி சாந்தி, கர்ப்பிணியை கடிந்துகொண்டதோடு, கருக்கலைப்பு செய்ய வந்த பெண்ணை பார்த்து, உனக்கு என்ன டிகிரி இருக்கு கருக்கலைப்பு செய்ய என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
இதோடு, கருக்கலைப்புக்கு 30 ஆயிரம் என அந்த பெண் வசூல் வேட்டை நடத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் பனமரத்துபட்டியை சேர்ந்த சித்ராதேவியை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
ஏற்கனவே கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், இதேபோல மற்றுமொரு சம்பவம் தர்மபுரியில் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.