குழந்தையை தேடி அலைந்து கிணற்றை எட்டி பார்த்த தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி

Update: 2024-09-01 11:23 GMT

வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த அனுமன், ராஜஸ்தானில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கனகவள்ளி. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஹர்சத் என்ற மகன் இருந்தான்.

நேற்று வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஹர்சத், சிறிது நேரத்தில் மாயமானதால் பதற்றமடைந்த குடும்பத்தினர் குழந்தையை தேடினர், எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், சந்தேகமடைந்து, அருகில் இருந்த கோயில் கிணற்றில் பார்த்த போது குழந்தை கிணற்றில் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், குழந்தையை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு,குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்