மகன் கண் முன்னே சிதறிய தந்தை.. நொடியில் முடிந்த வாழ்கை..-தர்மபுரியில் நெஞ்சை உலுக்கும் சோகம்..
மான்காரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி... இன்று காலை தனது மகனை பள்ளியில் விடுவதற்காக பைக்கில் சென்றுள்ளார். மகன் ஜாமின்ட்ரி பாக்ஸ் கேட்டதால் சோலைக் கொட்டாய் பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு சாலையை கடக்க நடைமேடை மீது நின்றுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சின்னசாமி மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே மகன் கண் முன்னே சின்னசாமி உடல் நசுங்கி உயிரிழந்தார். தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், விபத்து தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.