"ஜாதியை குறிப்பிட்டு முடி வெட்ட மறுத்த கடை உரிமையாளர்" மனதை நோகடித்த வீடியோ
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பட்டியலின இளைஞர்களுக்கு முடி வெட்ட மறுத்த கடை உரிமையாளர் மற்றும் அவரது மகன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கீரைப்பட்டி பகுதியில் உள்ள முடி திருத்தும் கடையில், பட்டியலின இளைஞர்களுக்கு முடி திருத்தம் செய்ய முடியாது என கடை உரிமையாளரின் மகன் கூறியதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து கடை உரிமையாளருக்கும், இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கடை உரிமையாளர் மற்றும் அவர் மகன் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டது.