மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் வரும் 30-ஆம் தேதி பட்டணப் பிரவேசம் நடைபெற உள்ளது. அன்றைய தினம், தருமபுரம் ஆதீன கர்த்தர் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், சிவிகை பல்லக்கில் எழுந்தருளி பட்டணப் பிரவேசம் செய்ய உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற பட்டணப்பிரவேசத்தின்போது, திராவிட இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்போதைய கோட்டாட்சியர், நிகழ்ச்சிக்குத் தடை விதித்தார். பின்னர், பக்தர்களும், பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தார். இந்த ஆண்டுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் எதிர்ப்புகள் வருமா என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.