தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு அடித்த எச்சரிக்கை..11,538 பேர் பாதிப்பு.. அதிர்ச்சி ரிப்போர்ட்
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாறுபட்ட வானிலை காரணமாக சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, உட்பட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நடப்பாண்டில் டெங்குவால் இதுவரை 11,538 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்தாண்டு 607 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 1604ஆக அதிகரித்துள்ளது. கோவையில் கடந்த ஆண்டு 408ஆக பதிவான நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,278 ஆக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை, டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது.