"நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட திமுகவிடம் கோரிக்கை" - ஜவாஹிருல்லா | DMK | Parliament Election
2024 நாடாளுமன்றத் தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிட திமுகவிடம் வாய்ப்பு கேட்பதற்கு கட்சியின் நிர்வாக குழு முடிவு செய்து செய்துள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் நிர்வாக குழு கூட்டம், அதன் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் கோவையில் நடைபெற்றது. அதில், எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தல் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மனித நேய மக்கள் கட்சிக்கு கண்டிப்பாக வாய்ப்பு தர வேண்டும் என்று திமுகவிடம் கோரிக்கை வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.