உயிருடன் இருக்கும் கணவருக்கு இறப்பு சான்றிதழ்.. விதவை உதவித்தொகைக்காக மனைவி பகீர் செயல்

Update: 2024-03-02 02:42 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கப்பூர் மேலே வீதி பகுதியை சேர்ந்தவர் திருமால். இவரது முதல் மனைவி உயிரிழந்த நிலையில், கடந்த 2000ஆம் ஆண்டு முத்துலட்சுமி என்பவரை 2வது திருமணம் செய்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு வரை கணவருடன் வாழ்ந்து வந்த முத்துலெட்சுமி, அவரை விட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, முத்துலெட்சுமி தனது கணவர் இறந்ததுபோல் இறப்பு சான்றிதழ் வாங்கி, விதவை உதவித் தொகை பெற்று வருவது திருமாலுக்கு தெரியவரவே அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இறப்பு சான்றிதழை நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகைப்பட ஆதாரங்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பளரிம் திருமால் புகார் மனு அளித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்