இருள் சூழ்ந்த மேகங்கள்..! விடாமல் பொளந்து கட்டும் மழை சாலையில் ஓடும் வெள்ளம் | Cuddalore Heavy Rain
சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கும் கனமழை, கடந்த 24 மணி நேரத்தில் பரங்கிப்பேட்டையில் 12.9 சென்டிமீட்டர் மழை பதிவாகிய நிலையில், பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகுகளில் மழைநீர் தேங்கியதால் தற்காலிகமாக சேவை நிறுத்தம்.
கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது, குறிப்பாக தமிழகத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டுள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது,பின்னர் காலையிலிருந்து மழை விட்ட நிலையில் தற்போது ஒரு மணி நேரத்திற்கு மேலாக மீண்டும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது, குறிப்பாக சிதம்பரம் நகர பகுதிகள் அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, சாமியார் பேட்டை, பிச்சாவரம், கிள்ளை, தாண்டவராயன் சோழன் பேட்டை, முட்லூர், சிங்காரகுப்பம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது, குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் பரங்கிப்பேட்டையில் 12 புள்ளி 9 சென்டிமீட்டர் மழை பதிவாகிய நிலையில் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகளில் மழைநீர் தேங்கி நிற்பதாலும் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் தற்காலிகமாக படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சிகளை பார்க்க முடிகிறது, மேலும் தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக பல்வேறு தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.