உக்கிரமாக களமிறங்கும் டானா புயல்.. யூகிக்க முடியாத ஒரு வேகம்.. ஹை அலர்ட்

Update: 2024-10-23 02:38 GMT

உக்கிரமாக களமிறங்கும் டானா புயல்.. யூகிக்க முடியாத ஒரு வேகம்.. ஹை அலர்ட்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இரவு 11.30 மணியளவில் ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து 650 கிலோ மீட்டர் தென் கிழக்கிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவில் இருந்து 720 கிலோ மீட்டர் தெற்கு தென்கிழக்கிலும் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மெதுவாக மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி 3 கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. நாளை தீவிர புயலாக உருமாறி, வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்றும் அப்போது, 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒடிசா, மேற்கு வங்கத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்படும் மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைப்பதற்கும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு கடலோர காவல்படையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர். இதனிடையே, சென்னை, எண்ணூர், கடலூர் உட்பட தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்