கடைசி சாப்பாடு மகளின் கையால்...விடிய விடிய அப்பாவை தேடிய மகள்கள் - பிணத்தை வைத்து விளையாடிய கொடூரன்

Update: 2024-10-12 12:59 GMT
  • தன் கடைசி சாப்பாடு மகளின் கையால்.. விடிய விடிய அப்பாவை தேடிய 4 மகள்கள்- பிணத்தை வைத்து விளையாடிய கொடூரன்
  • வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க அமைக்கப்பட்ட மின்வேலி அப்பாவி விவசாயி ஒருவரின் உயிரை பறித்திருக்கிறது. கிராம மக்களை சோகத்தில் மூழ்கடித்திருக்கும் இதன் பின்னணி குறித்து பார்க்கலாம் விரிவாக..
  • உளுந்து விதைக்க வயலுக்கு சென்று மாயமானவரை, பகலில் சடலமாக கண்டு ஊரே கதிகலங்கி போயிருக்கிறது..
  • கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள 50 குடி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்ற 70 வயது முதியவருக்குதான் இந்த விபரீதம்...
  • தன் நிலத்தில் உளுந்து விதைக்க சென்றவர், வயலில் இருந்த புல்லை மாட்டுக்காக அறுத்துக் கொண்டிருந்த போது, பக்கத்து நிலத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த மின் வேலியால் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார்...
  • சண்முகத்தின் பக்கத்து நிலத்தில் சுப்பிரமணியன் என்பவரும், நாராயணன் என்பவரும் மரவள்ளிக் கிழங்குகளை பயிரிட்டிருந்த நிலையில், அதனை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க இருவரும் நிலத்தை சுற்றி மின் வேலி அமைத்ததிலே இந்த கோரம்...
  • இதில், பேரவலம் என்னவென்றால்.. முதியவர் சண்முகம்.. சுப்பிரமணியன் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்...
  • இதையறிந்து அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன், முதியவரின் சடலத்தை தூக்கி நாராயணின் நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது போல் நாடகாமடியது மனதை ரணமாக்கி இருக்கிறது..
  • செய்யாமல் இருந்த நிலையில், போலீஸ் விசாரணையில் இது அம்பலமாகி இருக்கிறது...
  • முதியவருக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்...
  • வயல்களில் சட்டவிரோதமாக மின்வேலி அமைப்பதும், இதனால் ஏற்படும் உயிர்பலியும் தொடர்கதையாகி இருக்கும் நிலையில், இந்த சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் போலீசாரை வலியுறுத்தி இருக்கின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்