லஞ்சம் கேட்டதால் த*கொலை முயற்சி.. - தமிழகத்தில் அதிர்ச்சி..

Update: 2024-09-08 07:51 GMT

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் கேட்டதாக கூறப்படும் விவகாரத்தில், விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

பாளையங்கோட்டை கிராமத்தைச் சந்தோஷ்குமார் என்பவர் சுமார் 13 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது நிலத்தில் விளைந்த நெல்லை, வலசக்காடு கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளார். அங்கு இவரது நெல்லை கொள்முதல் செய்ய 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், அதில் சந்தோஷ்குமார் 30 ஆயிரம் ரூபாயை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மீதமுள்ள பணத்தை கொடுக்காததால் இவரது நெல்லை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தியதாக தெரிகிறது. இதனிடையே மழை பெய்ததில் நெல் சேதமடைந்ததால் மனமுடைந்த சந்தோஷ்குமார், தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைத் தொடர்ந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இச்சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்