கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே, நகைகளுக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்துள்ள பெரிய காட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி. 75 வயதான இவர், கணவரை இழந்து தனியே வசித்து வந்த நிலையில், கடந்த 23 ஆம் தேதி நள்ளிரவில் மர்மநபர்களால் வீடு புகுந்து படுகொலை செய்யப்பட்டார். விசாரணையில், காதில் அணிந்திருந்த 4 கிராம் தங்க நகைகளுக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டது தெரியவர, அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், கீழிருப்பை சேர்ந்த ஐயப்பன் மற்றும் பெரிய காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் ஆகிய இருவர் மது அருந்த பணமில்லாததால், மூதாட்டியை கொன்று அவர் அணிந்திருந்த நகையை திருடிச் சென்றது தெரியவர, இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.