அசுர வேகத்தில் வந்து புளிய மரத்தில் மோதிய லாரி.. ஸ்பாட்டிலேயே பிரிந்த டிரைவர் உயிர்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மீன் ஏற்றி சென்ற லாரி, புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் சம்பவிடத்திலேயே உயிரிழந்தார். சீர்காழியில் இருந்து கேரளாவுக்கு மீன் ஏற்றிச் சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் ராஜவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கிளீனர் சந்தோஷ்குமார், வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.