உறவில் மிருகமாக மாறிய கணவன் மறுத்த மனைவியின் கழுத்தறுத்த கொடூரம் -திருவையாறை அதிர வைத்த சம்பவம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மதுபோதையில் மனைவியை தாம்பத்திய உறவுக்கு அழைத்த கணவன், வர மறுத்த மனைவியை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவையாறு அருகேயுள்ள மேலத்திருப்பூந் துருத்தியை சேர்ந்தவர் விவேக். இவருக்கும், கரந்தை பகுதியை சேர்ந்த மார்த்தாள் மேரி என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களிலே தாய் வீட்டிற்கு திரும்பிய மார்த்தாள் மேரியை அவரது உறவினர்கள், வலுக்கட்டாயமாக கணவனின் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென கணவனின் வீட்டில் மார்த்தாள் மேரி சடலமாக உயிரிழந்து கிடந்தது உறவினர்களை அதிர்ச்சியடைய செய்தது. உடனே, பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதும், விசாரணையில் கிடைத்த தகவல்கள் சந்தேக மரணம் என்ற வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.