"50,000 பேரிடம் சுருட்டிய பல கோடி" - 2வது முறையாக கம்பி நீட்டிய கம்பெனி - சென்னை அருகே பரபரப்பு

Update: 2023-11-07 04:10 GMT

சோழவரம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் பணம் வசூலித்து நகை, பரிசு பொருட்களை கொடுக்காமல் மூடப்பட்ட சீட்டு கம்பெனியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காந்திநகரில் சாட்சி ஸ்டார் ஏஜென்சி என்ற பெயரில் தீபாவளி, அட்சய திருதியை, பொங்கல் சீட்டு நடத்தி வந்துள்ளனர். இங்கு சீட்டு பிடித்து கொடுத்தால் கமிஷன் என்ற அடிப்படையில் ஏஜென்டுகள் மூலம் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு வந்துள்ளது. மாதம் 500, 1000 ரூபாய் என 12 மாத சீட்டு பணம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நகை, மளிகை பொருட்கள், பட்டாசு, பரிசு பொருட்கள் வழங்குவதாக கூறி பணம் வசூலிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு தீபாவளி சீட்டு கட்டியவர்களுக்கே நகை, பொருட்களை கொடுக்கவில்லை என்றும் நிறுவனம் மூடப்பட்டு உரிமையாளர் தலைமறைவாக உள்ளதால் தங்களுடைய பணத்தை பெற்று தருமாறு பல முறை பாதிக்கப்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று பணம் வசூலித்த நிறுவன வாயிலில் வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி 15ஆம் தேதி வரையில் என வாடிக்கையாளர்கள் வரிசை எண் அடிப்படையில் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதனையறிந்த பணம் செலுத்திய ஏஜென்டுகள் மற்றும் பாதிக்கப்பட்டோர் சீட்டு கம்பெனியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்