ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருந்தாலும், அது குற்றம் தான் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2019ல் இ-சிகரெட் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில், உறுதியுடன் அமல்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியது. மேலும், இ-சிகரெட்டை விற்பனை செய்த 15 இணைய தளங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், இ-சிகரெட்டை எந்த வடிவிலும், எந்த எண்ணிக்கையிலும், எந்த முறையில் வைத்திருந்தாலும் குற்றம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது. மேலும் தடையை மீறுவோர் குறித்து புகார் தெரிவிக்க, ஒரு இணையதளத்தையும் சுகாதார அமைச்சகம் தொடங்கி உள்ளது.