குழந்தை உணவில் `கூல் லிப்' சீர்கெட்ட உடல்நலம்; அதிர்ந்த தாய் - சுற்றி சுற்றி ரெய்டு விட்ட அதிகாரிகள்
கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜாஸ்மின் என்ற பெண், செயலி மூலமாக பிரபல உணவகத்தில் இருந்து உணவு ஆர்டர் செய்துள்ளார். வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட உணவை அவரும், அவரது குழந்தையும் சாப்பிட தொடங்கியுள்ளனர். அப்போது, உணவில் தேயிலை தூள் பொட்டலம் போன்ற பொருள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண், அதனை சோதனை செய்துள்ளார். அப்பொருள் கூல் லிப் என அறிந்த நிலையில், அதனை சாப்பிட்டதால் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதனிடையே, சம்பந்தப்பட்ட உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.