விறுவிறுவென நிரம்பும் அட்மிஷன்.. கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை செயலாளர் போட்ட உத்தரவு
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகள் குறித்த அரசாணையை, உயர்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார். அதில் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும் பாடவாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விபரங்களை உயர்கல்வித்துறை அறிவித்துள்ள இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், மாணவர் சேர்க்கை விதிமுறைகளை 100 சதவீதம் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். விதிமுறைகளை மீறினால் சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் முதல்வர்களும், மாணவர் சேர்க்கை குழுவுமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், மாணவர் சேர்க்கை தொடர்பான ஆவணங்களை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.