"யாராவது மீறினால்.." கடலூர் கலெக்டர் கடும் எச்சரிக்கை | Cuddalore | Collector
கடலூரில் தீபாவளி இனிப்பு தயாரிப்பு குறித்து, மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி தீபாவளி பலகார தயாரிப்பாளர்கள், பேக்கரி விற்பனையாளர்கள் ஆகியோர் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின்படி பதிவுச்சான்று பெற்றிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் கலப்படமில்லாத சுத்தமான பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றும், அனுமதிக்கப்பட்ட அளவை மீறி நிறமிகளை பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் குறைகள் இருப்பின் வணிகர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.