நள்ளிரவில் திடீரென காவல் நிலையத்தை சூழ்ந்த மக்கள்.. கோவையில் பரபரப்பு

Update: 2024-06-08 07:46 GMT

கோவை மாவட்டம் சூலூரில், பொது குடிநீர் செல்லு குழாயை உடைத்த மர்ம நபர்களை கைது செய்யக் கோரி காவல் நிலையம் முன் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சூலூர் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்திற்கு ஊராட்சி சார்பில் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து நீர் எடுக்கப்பட்டு குழாய் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் செல்லும் குழாயை சிலர் உடைத்ததால், அய்யம்பாளையம் கிராம மக்களுக்கு குடிநீர் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த கிராம மக்கள், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, சுல்தான்பேட்டை காவல் நிலையத்தை இரவு நேரத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பொள்ளாச்சி- திருப்பூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த கருமத்தம்பட்டி துணைக் கண்காணிப்பாளர் தங்கராமன், குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்