மனைவியோடு சண்டையிட்டதால் மது அருந்திய கணவன்.. துடிதுடித்து பலியானதால் பரபரப்பு

Update: 2024-11-02 01:42 GMT

மனைவியோடு சண்டையிட்டதால் மது அருந்திய கணவன்.. துடிதுடித்து பலியானதால் பரபரப்பு

சூலூர், காவேரிநகர் குடியிருப்பை சேர்ந்த இளைஞர் வெற்றிவேலுக்கும், அவரது மனைவிக்கும் தீபாவளிக்கு முந்தைய நாள் வீட்டில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வீட்டைவிட்டு வெளியேறிய வெற்றிவேல் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி ராஜலட்சுமி பல்வேறு இடங்களில் கணவரை தேடி கிடைக்காததால் போலீசில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த சூழலில், கலங்கள் பாதையில் இருக்கும் டாஸ்மாக் கடையில் அதிக அளவு மது அருந்திய வெற்றிவேல் அங்கேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அங்கிருந்தவர்கள் வெற்றிவேல் பையில் இருந்த செலபோனை எடுத்து மனைவி ராஜலட்சுமிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக ராஜலட்சுமி புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தீபாவளி நாளில் மனைவியிடம் சண்டையிட்டு கணவர் மதுகுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்