ஒற்றை காபியால் பிரபல தியேட்டருக்கு சிக்கல்.. ரூ.10 ஆயிரம் அபராதம்.. சம்பவம் செய்த பப்ளிக்

Update: 2024-09-04 14:48 GMT

சென்னை திரையரங்கில் கெட்டுப்போன காபி வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் 10 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன்

சென்னையில் உள்ள திரையரங்கில் கடந்த வருடம் ஜூன் மாதம் 5ம் தேதி படம் பார்க்கச் சென்ற போது திரையரங்கில் உள்ள கேண்டினில் 160 ரூபாய் கொடுத்து காபி வாங்கிக் குடித்துள்ளார்...

ஆனால் காபி முழுமையாக கெட்டுப்போன நிலையில் இருந்துள்ளது.

கெட்டுப் போன காபியைக் காட்டி மாற்றித் தருமாறு கேட்ட போது, அதற்கு கேன்டின் ஊழியர்கள் மறுத்த நிலையில்,

சிவசுப்பிரமணியன், நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சிவ சுப்பிரமணியனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் நஷ்ட ஈடாக 7 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவுக்காக 3 ஆயிரம் ரூபாயும் சேர்த்து 10 ஆயிரம் ரூபாயை 1 மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும்,

தவறினால் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்