"10 ஆயிரம் ரூபாய்க்கு சீர்வரிசை" அசத்திய திருவண்ணாமலை மக்கள் உறைந்துபோன சர்க்கஸ் குழுவினர்
மதுராந்தகம் சாத்தமை முல்லை கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவர் சர்க்கஸ் தொழிலை செய்து வருகிறார்.. 10 நாட்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு கிராமமாக தனது குடும்பத்துடன் சேர்ந்து சென்று இத்தொழிலில் அவர் ஈடுபட்டு வருகிறார்.. மோரணம் கிராமத்திற்கு அவர் இதேபோல் சர்க்கஸுக்காக வந்த நிலையில், வந்த அடுத்த தினனே ரத்தினத்தின் மகள் பூப்படைந்து விட ரத்தினத்தின் குடும்பத்தார் செய்வதறியாது விழித்துள்ளனர்.. இதையறிந்த கிராம மக்கள் சுமார் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் வாங்கி, பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்து சிறுமிக்கு சடங்குகளை செய்துள்ளனர்.. இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..