தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த பள்ளி சிறுமிகளான கீர்த்தனா, ரெஜினா, ரஞ்சனி மற்றும் பிருந்தா லட்சுமி ஆகிய நான்கு சிறுமிகளும் காலையில் பள்ளிக்குச் செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில், அவர்கள் பள்ளி செல்லாதது தெரியவந்தது. இது குறித்து பெற்றோர் மற்றும் பள்ளி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது அடுத்து, அவர்களைப் போலீசார் தேடி வந்தனர். அப்போது பள்ளி அருகே உள்ள சிறுமி ரெஜினாவின் பாட்டி வீட்டில் யாரும் இல்லாததால் அங்கு மாணவிகள் நான்கு பேரும் விளையாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை மீட்ட காவல்துறையினர், அவர்களுக்கு அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.