குட்டையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் - சடலமாக மிதந்த பரிதாபம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்
குட்டையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் - சடலமாக மிதந்த பரிதாபம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மழை நீர் நிரம்பிய குட்டையில் மீன் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கூலித் தொழிலாளர்களின் மகன்களான கதிர்வேல் மற்றும் கிஷோர் குமார் ஆகியோர், மழை தண்ணீர் நிரம்பி இருந்த குட்டையில் மீன்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
நீண்ட நேரம் ஆகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர்கள் போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார், குட்டை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இரண்டு சிறுவர்களது உடல்களையும் கைப்பற்றினர்.