சிதம்பரம் நடராஜர் கோயில் அருகே திடீரென பற்றி எரிந்த தீ - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-03-01 16:56 GMT

உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் கிழக்கு கோபுர வாயில் முன்பு அமைந்துள்ள மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோயில் முன்பு உள்ள தனியார் விடுதியின் கீழ் தளத்தில் பல் மருத்துவமனை செயல்பட்டு வரும் நிலையில், திடீரென அதிகாலை தீப்பற்றியுள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீவிபத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்