"கெட்டுப்போன சிக்கன சாப்டுட்டு சாக சொல்றீங்களா?" - "சிக்கன் மேல தொட்டுப் பாருங்க" - வைரலாகும் வீடியோ
திண்டுக்கல் பைபாஸ் சாலையில் பிரபல அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த அசைவ உணவகத்திற்கு வந்த வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் பிரியாணி மற்றும் GRILL சிக்கன் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட GRILL சிக்கனில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த நவீன், உணவகத்தின் சமையல் அறைக்கு நேரடியாக சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.