சென்னையை சுற்றி உருவான குளிர்ச்சி - பெரும் மகிழ்ச்சியில் மக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேலவளம் பேட்டை, செய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்தது. இதனால் நிலம் குளிர்ந்து வெயிலின் தாக்கம் குறைந்தது. இதேபோல், காஞ்சிபுரம் மாநகர பகுதிகளான ஒலிமுகமது பேட்டை, சங்கர மடம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியதை அடுத்து, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.