- சென்னை புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் இடி மின்னலுடன் மழை பெய்தது.சென்னை புறநகர் பகுதிகளான போரூர், ஐயப்பன்தாங்கல், ராமாபுரம், வளசரவாக்கம், மதுரவாயல், வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வந்தது. அதைத் தொடர்ந்து, நேற்றிரவு திடீரென இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை புறநகர் பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் சில இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.