பள்ளிக்கரணை வடியாத மழை நீர் - திக் திக் கழுகு பார்வை காட்சி

Update: 2024-10-16 13:08 GMT

பள்ளிக்கரணை சாய் பாலாஜி நகரில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீரால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ...

மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துவிட்ட நிலையில் இப்பகுதியில் மட்டும் வெள்ளநீர் தேங்கி இருப்பதால் மக்கள் வேதனை ...

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு மிக அருகாமையில் உள்ள இந்த நகரில் சாலையில் வெள்ளநீர் தேங்கியுள்ளது ...

மாநகராட்சி சார்பில் கடந்த ஆண்டு முதல் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் ஆங்காங்கே ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியும் கால்வாய்கள் ஒருங்கிணைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாததால் வெள்ளநீர் முழுமையாக வழியாத சூழல் இருப்பதாக பொதுமக்கள் வேதனை ...

வேளச்சேரி மேடவாக்கம் மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் வெள்ளநீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கலந்து சதுப்பு நிலத்தின் உபரி நீர் ஒக்கியம் மடுவு கால்வாய் மூலமாக பக்கிங்காம் கால்வாயில் கலந்து கோவளம் அடுத்த முட்டுக்காடு பகுதியில் கடலில் கலக்க வேண்டும் ...

ஆனால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து வெளியேறும் வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் கலந்து விட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆண்டுதோறும் பள்ளிக்கரணை சாய் பாலாஜி நகர் மக்கள் இந்த பிரச்சினை எதிர்கொள்வதாகவும் கடந்தாண்டை காட்டிலும் தற்போது வடிகால் வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்க கூடிய நிலையில் மேடான பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து விடுவதாகவும் , சதுப்பு நிலத்தை ஒட்டிய பகுதிகளில் மட்டும் வெள்ளநீர் தேங்கக் கூடிய சூழல் தொடர்வதாக வேதனை தெரிவிக்கின்றனர் ...

Tags:    

மேலும் செய்திகள்