சென்னையை பரபரப்பாக்கிய பெண்ணின் லைவ் வீடியோ... போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி திருப்பம்

Update: 2024-09-03 09:06 GMT

சென்னையில் வீட்டு உரிமையாளர் மீது புகார் தெரிவித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட பெண்ணே, அவரை நாயைவிட்டு கடிக்கச் செய்து நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விருகம்பாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியில் வசிக்கும் லோகநாயகி என்பவர், சமூக வலைதளத்தில் வெளியிட்ட லைவ் வீடியோவில், தனது குழந்தையை காப்பாற்றுமாறும், வீட்டு உரிமையாளர், தனது வீட்டில் இருந்த பொருட்களை வெளியே வீசிவிட்டதாகவும் கூறி அழுதார். சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். கோடம்பாக்கத்தைச் சேர்ந்த லோகநாயகி கணவரை பிரிந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், பழனியின் வீட்டில் வாடகைக்கு குடியேறி, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதை பயன்படுத்திக் கொண்டு லோகநாயகி, அந்த வீட்டை மற்றொரு நபரிடம் 6 லட்சம் ரூபாய்க்கு லீசுக்கு விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் வீட்டைவிட்டு வெளியேறுமாறு பழனி கூறவே, லோகநாயகி தனது நாயை விட்டு பழனியை கடிக்கச் செய்தது விசாரணையில் தெரியவந்தது. பழனியை தனது தம்பியை வைத்து தாக்கிய விவகாரத்தில் லோகநாயகி மீது போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்