சைபர் கிரைம் குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வரக்கூடிய நிலையில் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் விழிப்புணர்வு காணொலி வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வரும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் எனவும், அதன் மூலம் ஏற்படும் ஆபத்து மற்றும் பின்னணி குறித்து குறும்படம் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பொய் செய்திகளை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் எனவும், செய்தியின் உண்மைத் தன்மையை பலமுறை ஆராய்ந்து பார்த்து, பகிர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.