இனி இவர்களுக்கும் அரசு பணி கொடுத்தாக வேண்டும்.. திருப்புமுனையான ஐகோர்ட் தீர்ப்பு

Update: 2024-09-11 08:44 GMT

தமிழகத்தில் கடந்த 2022 ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட குரூப் 2 தேர்வுக்கு சத்யா என்பவர் விண்ணப்பித்திருந்தார். அதில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டில் தனது பெயரையும் சேர்க்கக் கோரியிருந்தார். ஆனால், 12 ம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதியதால் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டில் சேர்க்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சத்யா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மனுதாரர் 11 ம் வகுப்பு வரை தமிழ் வழி பள்ளியில் படித்த போதும், குடும்ப சூழல் காரணமாக 12 ம் வகுப்பு தேர்வை தனித்தேர்வராக தமிழ் வழியில் எழுதியிருக்கிறார். தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழும் பெற்றிருக்கிறார் என்பதால், தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற அவருக்கு தகுதி உள்ளது என உத்தரவிட்டார். ஏற்கனவே திருப்பூரில் ஊரக வளர்ச்சித் துறை உதவியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு நியமன உத்தரவை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்