சென்னையில் சர்வதேச தரத்தில் ரெடியான மீன் அங்காடி... அசைவ பிரியர்களுக்கு சர்ப்ரைஸ் நியூஸ்!

Update: 2024-05-28 10:01 GMT

சென்னையில் சர்வதேச தரத்தில் ரெடியான மீன் அங்காடி... அசைவ பிரியர்களுக்கு சர்ப்ரைஸ் நியூஸ்!

சென்னை நொச்சிக்குப்பத்தில், சர்வதேச தரத்தில்

உருவாக்கப்பட்டுள்ள மீன் அங்காடி வரும் ஜூன்

இரண்டாவது வாரத்தில் திறக்கப்பட உள்ளது.

இரண்டு ஏக்கர் பரப்பளவில்,15 கோடி ரூபாய் செலவில்

உருவாக்கப்பட்டுள்ள மீன் அங்காடியில் 366 கடைகள்

அமைக்கபட்டுள்ளன. ஒவ்வொரு கடையும் 6.5 அடி நீளமும் 4.9 அடி அகலமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 60 இருசக்கர வாகனங்கள் மற்றும் 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீன்கள் விற்பனை மற்றும் மீன்களை வெட்டி சுத்தம் செய்வதற்கு தனித் தனியாக இடங்கள் உள்ளன. மீன்களைப் பதப்படுத்தி வைப்பதற்கான வசதி, கழிவுகளை சுத்திகரிப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ஜூன் இரண்டவது வாரத்தில் இது திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீன் பிடி தடை

காலம் முடிந்து பின் இங்கு மீன் விற்பனை தொடங்க உள்ளது. ஆனால் இங்கு மீன் விற்பனை செய்ய மாட்டோம் என அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்