சென்னை பெரம்பூர் சுரங்க பாதையில் அரை அடிக்கு மேலாக மழை நீர் தேங்கி இருந்த நிலையில், வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். 4 அடிக்கு மேல் தேங்கிய தண்ணீரை, மோட்டார்கள் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றினர். பெரம்பூரை தவிர்த்து, 20 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், வடிகால்களில் ஏற்பட்ட அடைப்புகளை அகற்றி, தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற மோட்டார்களை பொருத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளது. தற்போது பெரம்பூர் சுரங்கப்பாதையில் வாகன போக்குவரத்து சீராகி உள்ளது.