சென்னை, திருவொற்றியூரில் அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனம் மோதி முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருவொற்றியூர் காலடிப்பேட்டையை சேர்ந்த 63 வயது முதியவர் சுப்பையா என்பவர் உயிரிழந்த இந்த சம்பவத்தில், பைக்கை அதிவேகமாக இயக்கி வந்த எண்ணூர் திலகர் நகரை சேர்ந்த 22 வயது இளைஞர் ரவிச்சந்திரனும் படுகாயமடைந்தார். இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.