ஹிஸ்புத் தஹீரிர் என்ற தீவிரவாத அமைப்பு பல உலக நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆட்களை
சேர்த்ததாக சென்னையை சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கானது தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் டாக்டர் ஹமீது உசேன் உட்பட ஆறு பேரை,ஆறு நாள் போலீஸ் காவலில் எடுத்து என் ஐ ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதில், இந்த இயக்கத்தில் உள்ள பல நாடுகளில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்துள்ளது.மேலும் பல்வேறு செல்போன் எண்களை பயன்படுத்தி வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி, அதில் ரகசிய யூட்யூப் லிங்க் கொடுத்து இணைய வழி சந்திப்பு மற்றும் மூளைச்சலவை செய்ததும் தெரியவந்துள்ளது.