வித்தை காட்ட நினைத்து - குத்து வாங்கிய இளைஞர் -கொட்டிய ரத்தம் - சென்னையில் அதிர்ச்சி
சென்னையில் மது போதையில் ஆட்டோ கண்ணாடியை வெறும் கையால் உடைத்த இளைஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐஸ் ஹவுஸ் பகுதியை சேர்ந்த கார்த்திக் தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது மது போதையில் அருகே இருந்த கார்த்திக் ஆட்டோவின் பின்பக்க கண்ணாடியை கையால் உடைத்துள்ளார். அதில் கையில் கண்ணாடி குத்தியதில் ரத்தம் அதிக அளவில் வெளியேறியதால் மயக்கம் அடைந்த கார்த்திக்கை உடனிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.