திருடனிடம் கைவரிசை காட்டிய பெண் உதவி ஆய்வாளர் - ட்விஸ்ட்டுக்கு மேல ட்விஸ்ட்
திருடனிடம் கைவரிசை காட்டிய பெண் உதவி ஆய்வாளர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த குஸ்டவ் எரிக் தனது குடும்பத்துடன் முடி விற்பனை தொழிலை நடத்தி வருகிறார். கடந்த நான்கு நாட்களுக்கு முன் சூளைமேட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருக்கிறார். அப்போது அறையைப் பூட்டி விட்டு வெளியே சென்று திரும்பிய போது அறையில் வைக்கப்பட்டிருந்த இருபதாயிரம் டாலரைக் காணாது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் விடுதியின் ரூம் பாயாக பணிபுரிந்த திரிபுராவைச் சேர்ந்த மெஹதி ஹுசைன் என்பவரைக் கைது செய்து விசாரனை நடத்தினர். அதில் குஸ்டவ் எரிக்கின் அறையைக் கள்ளச்சாவி மூலமாகத் திறந்து 17 ஆயிரத்து 900 டாலரைத் திருடி வட பழனியில் உள்ள மணி எக்ஸ்சேஞ் கடையின் உரிமையாளர் சிவக்குமாரிடம் கொடுத்து இருக்கிறார். ஆனால் மெஹதி ஹுசைன் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்ததால் கடைக்காரர் போலீசுக்குத் தகவல் அளித்து இருக்கிறார்.