"என்ன நடக்குது தலைநகரில்..?" - தாய்ப்பால்-ஐ வைத்து மெகா பிசினஸ்..! திடுக்கிடும் பின்னணி...
சென்னை மாதவரத்தில், தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாதவரம், கே.கே.ஆர் கார்டன் பகுதியை சேர்ந்த செம்பியன் முத்தையா என்பவர் மருந்து விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர் தன் கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பாலை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே, கடைக்குள் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்திய அதிகாரிகள், கடையின் குளிர்சாதன பெட்டியில் இருந்து 200க்கும் மேற்பட்ட பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தாய்ப்பாலை பறிமுதல் செய்தனர். விசாரணையில், 200மிலி தாய்ப்பால் சுமார் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. தாய்ப்பால் யாரிடமிருந்து பெறப்பட்டது, யார் மூலமாக கொண்டு வரப்பட்டது என தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கடையை சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.