போட்டோவை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்த கொடூர அண்ணன்.. மும்பைக்கு ஒடிய சென்னை பெண்
சென்னை மதுரவாயலை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை, அவரது சித்தப்பா மகனான முகமது ரிஸ்வான் என்பவர் அரை நிர்வாணமாக போட்டோ எடுத்து மிரட்டியுள்ளார். அவரது பேச்சை கேட்டு கடந்த ஜுன் மாதம், நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு இளம்பெண் மும்பை சென்றுள்ளார். மும்பையில் இருந்து மகளை பெற்றோர் மீட்டுவந்த நிலையில், முகமது ரிஸ்வான் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தெலங்கானாவில் உள்ள முகமது ரிஸ்வானை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.