சென்னையில் அதிகம் கூட்டம் கூடும் இடம்.. "3 மாசம் ஆச்சு.." மக்கள் வைத்த முக்கிய கோரிக்கை | Thanthitv

Update: 2024-05-29 12:29 GMT

சென்னை அடுத்த தாம்பரம் சானடோரியம் பகுதி, பேருந்து நிலையம், மெப்ஸ் ஏற்றுமதி வளாகம், சித்த மருத்துவமனை, நீதிமன்றம், அரசு அலுவலகங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாக உள்ளது. நாள்தோறும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஜிஎஸ்டி சாலையை கடந்து செல்ல சானடோரியம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள எஸ்கலேட்டரை பயன்படுத்துகின்றனர். கடந்த பல மாதங்களாக பழுதாகி கிடக்கும் இந்த எஸ்கலேட்டரால் சாலையை கடக்க படிக்கட்டுகளை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். நீண்ட நாட்களாக செயலற்றுக்கிடக்கும் எஸ்கலேட்டரை உடனடியாக சரி செய்ய தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்