பைன் போட்ட போலீஸ்.. நெஞ்சில் அடித்து கதறிய நபர் - பெண்ணின் போனை பிடுங்கியதால் அதிர்ச்சி

Update: 2024-08-27 15:14 GMT

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு எதிரே வாகன தணிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் பின்னால் இருந்தவர் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் போலீசார் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த நபர், எப்படி ஆயிரம் ரூபாய் கட்டுவேன்... என கூறி நெஞ்சில் அடித்து கதறியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்தில், செல்போனை போலீசார் பறிக்க முயன்றதாக மேலும் ஒரு பெண் குற்றம் சாட்டிய வீடியோவும் வைரலாகியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்