மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பூந்தமல்லி வழியாக பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு நேரடி சேவையை வழங்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பூந்தமல்லி வரை புதிய மெட்ரோ வழித்தடத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பூந்தமல்லி வழியாக பரந்தூர் வரை புதிய வழித்தடம் அமைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.மொத்தம் 60 கிலோமீட்டர் தொலைவிற்கான மெட்ரோ வழித்தடம் குறித்த திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படவுள்ளது. மீனம்பாக்கத்தில் இருந்து ஒருமணி நேரத்தில் பரந்தூர் விமான நிலையம் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தடத்தில் 4 கிலோ மீட்டருக்கு ஒரு ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.